ஒன்றின் மீதோ அல்லது ஒருவரின் மீதோ எப்போது மதிப்பு வரும்?
ஒழுகுதல் என்றால் என்ன?
மதித்தல் வேறு ஒழுகுதல் வேறா?
ஒழுகுதலுக்கு மதிப்பு அவசியமா?
“குருவை மதித்து ஒழுகினால் குருவின் உயர்வு மதிப்பவரின் தரம் உயரும்” என்பது அறிவியலா?
உயர்கின்ற பயன் எந்த இறை நியதியின் கீழ் கிடைக்கின்றது?
மதித்தொழுகலின் பயன் என்ன?
குருவின் உயர்வு என்றால் என்ன?
மதிப்போரின் தரம் என்றால் என்ன?
மதிப்பவரின் தரம் உயரும் என்றால் அந்தத் தரம் என்ன?
மதித்தொழுகலின் விளைவாக பிறவிப்பயன் கிடைக்கும் என்றால் பிறவிப்பயன் என்பது என்ன?
பிறவிப்பயன் பெறுவது ஒவ்வோர் மனிதனுக்கும் அவசியம் தானே?
எந்த கோணத்தில் பிறவிப்பயன் அவசியமாகின்றது மனிதனுக்கு?
பிறவிப்பயன் தரும் நன்மைகள் என்ன? ஒன்றா? பலவா?
ஏன் மனிதர்கள் பிறவிப்பயன் அடைவதற்கு முயற்சி செய்வதில்லை?
குருவை மதிப்பதில் சீடருக்கு என்ன சிரமம் இருக்கப் போகின்றது?
ஏழு எழுத்துக்களைக் கொண்ட குருவை “ம தி த் தொ ழு க ல்“ என்கின்ற வார்த்தையில் என்னென்ன படிநிலைகள் உள்ளன என்பதனை பட்டியலிட்டு செயல்படுத்தலாமன்றோ?
“குருவின் உயர்வு (உயர்ந்த குருவின் தன்மைகளும், அருட்பார்வைகளும், அருட்செய்திகளும்) குருவை மதிப்பவரின் தரத்தை உயர்த்தும்” என்று மகரிஷி அவர்கள் கூறியிருப்பது, திருமூலர் குருவைத் தேடுவதில் இருக்கும் எச்சரிக்கையை நினைவு படுத்துகின்றதல்லவா?
அபக்குவன்!!
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழி விழுமாறே.”
. . . திருமூலர்
(அபக்குவன் என்று கொடுக்கப்பட்ட தலைப்பு சிந்திக்கக் கூடியது)
23. திருமூலரின் உண்மை-குரு பற்றிய எண்ணம்போல் பக்குவ-
மனவளக்கலைஞர்கள், வேதாத்திரி மகரிஷி அவர்களை குருவாகப்
பெற்றமைக்கு பூர்வபுண்ணியம் செய்திருக்க வேண்டும் அல்லவா?
24. இந்த அமுதமொழியில் ஐயங்கள் வேறு ஏதேனும் இருப்பின் அவற்றைக் கேள்விகளாக தங்களுக்குள்ளாகவே எழுப்பி சிந்தனை செய்து – சுயசத்சங்கம் நடத்தி பயன்பெறலாமன்றோ?
நான் யார் என அறிவதால் பயன்களும், அறியாததால் துன்பங்களும் 2 / 2
அ.வி.333
03-04-2022-ஞாயிறு
வேதாத்திரி மகரிஷி அவர்கள் அமெரிக்காவில் பயிற்சியில் பங்கு கொண்ட மாணவர்களுக்கு மனதைப் பற்றிய பாடம் நடத்துகிறார்.
ஐந்தறிவு சீவன்கள் வரை உருவாகிய புலன் உணர்க்கருவிகள் புற நிகழ்ச்சிகளாகிய அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்தை மட்டுமே உணர்வதற்காக உருவாகின. ஆனால் ஆறாம் அறிவிற்கு என்று தனியாக புலன் உணர்க்கருவி ஏதும் உருவாகாவிட்டாலும், புலன்களின் உதவியின்றி, ஆறாம் அறிவு உணர வேண்டியது ஒன்று இருக்கின்றது.
பேரறிவு ஒரறிவிலிருந்து படிப்படியாக வளர்ச்சியடைந்து, ஆறு அறிவு வரை தன்மாற்றம் அடைந்துள்ளதால், ஒரறிவிலிருந்து ஐயறிவு வரை உணர்வதற்கென்று தனித்தனியாக, தொடுஉணர்வு, சுவை உணர்வு, ஒலி உணர்வு, ஒளி உணர்வு, நுகர் உணர்வு என்று ஐவகை உணர்வுகள் இருந்தது போல் ஆறாம் அறிவிற்கு உணர்வதற்கென்று ஓர் உணா்வு இருக்கின்றது. அதனை உணர்ந்தே ஆக வேண்டும் ஆறாம் அறிவு. அந்த பிரத்யேக உணர்வைப் பெற்றால்தான் மனிதன், வள்ளுவர் கூறும் பிறப்பாகிய பெருங்கடலில் நீந்தி கரை சேர முடியும். மனக் கவலையையும் மாற்ற முடியும்.
“பிறவிப் பெருங்கடல் நீந்துவா் நீந்தார் இறைவன் அடி சேராதார்”.
இந்த இரண்டு குறளிலும் “இறைவன் அடி சோ்தல்” என்றும், “தாள்சோ்ந்தார்க்கு அல்லால்” என்றிருக்கின்றது. அதன் பொருள், அரூபமாகிய இறையினுடைய “பாதங்களைச் (அடி,தாள்) சோ்தல்” என்பதன் பொருள், பின்னப்பட்ட (Fractioned) அரூபமாகிய சிற்றறிவு, அகண்ட அரூபமாகிய பேரறிவுடன் ஒன்றிணைதலாகும். இது தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் “அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் – அறிவு முழுமை அது முக்தி” என்பதாகும்.
அந்த பிரத்யேக உணர்வு என்பது, புறத்தை உணர்வதோடு மட்டுமல்லாது அகத்தையும் உணர்வதாகும். அகத்தை உணர்வதற்கு புலன்கள் தேவையில்லை. ஏன்? புறத்தே காணப்படுபவைகள் எல்லாம், பரிமாணங்களைக் (DIMENSIONS) கொண்ட (shape and image) பருப்பொருட்களும், அதிலிருந்து வரும் நிகழ்ச்சிகளாகும். எனவே புற உணர்விற்கு புலன்கள் தேவையிருக்கின்றன. ஆனால் ஆறாம் அறிவு அகத்தை உணர்வதற்காகத் தன்மாற்றம் அடைந்து வந்துள்ளது.
அகமாகிய உள்ளத்தில் எந்த பருப்பொருளும் இல்லை.
மாறாக அரூபம் ஆனால், பருப்பொருள் உருவாகக் காரணமாக இருந்த மெய்ப்பொருளாகிய பேரறிவே மனதின் மறுமுனையான உள்ளமாக உள்ளது.
எனவே அரூபமாகிய ஆறாம் அறிவு அகத்தை உணர்வதற்காக வந்துள்ளதால், அதற்கெனப் பிரத்யேகப் புலன் ஏதும் உருவாகவில்லை.
ஆகவே விலங்கினங்கள் வரையில் புற நிகழ்ச்சிகளை உணர்ந்த பேரறிவு மனித வடிவில், புற நிகழ்ச்சிகளுக்கான காரணம் என்ன, அவற்றின் மூலமும், முடிவும் என்ன, அவை எவ்வாறு உண்டாகின்றன என அறிந்து வாழ்வதுதான், திருவள்ளுவர் கூறும் இயற்கையின் ஆதிநிலை/இறை ஆறாம் அறிவாக மலர்ந்ததன் நோக்கம். இயற்கையே/இறையே, அறிவாக வந்துள்ளதால் நான் என்பது அறிவே, ‘நான் பார்க்கிறேன்’ என்கின்ற செயலில் யார் பார்க்கின்றது? அறிவுதானே பார்க்கின்றது. அப்டியானால் நான்=அறிவு என்கின்ற சமன்பாடுதானே வருகின்றது. ஆகவே நான் என்பது அறிவு. அறிவு இயற்கையின்/இறையின் ஆதிநிலையைிலிருந்து வந்துள்ளது. அப்படியானால் இயற்கையேதான்/இறையே தான் நானாக உள்ளது. இயற்கை/இறை நானாக (oneself) இருப்பதோடு மட்டுமல்லாது உலக மக்களாகிய 790கோடி நான்களும் இயற்கையே/இறையேயாகும். இயற்கையே ‘நானாக’ இருப்பதால், ‘நானின்’ (aim of Self)நோக்கமும் இயற்கையின் நோக்கமும் ஒன்றேயாகும். இவ்வாறாக நான் யார் என்கின்ற வினாவிற்கு விடை கருத்தியலாக அறியவேண்டும். அவ்வாறு நான் யார் எனக் கருத்தியலாக அறிந்ததோடு மட்டுமல்லாது, தொழிற் கல்வியில் கருத்தியல் பாடத்துடன் செய்முறையும் உள்ளது போல், இறை உணர் ஆன்மீகத்திலேயும் உள்ள செய்முறைப் பயிற்சியில் (அகத்தவம், தற்சோதனை) வெற்றி பெற வேண்டும். அதாவது கருத்தியலாக அறிந்ததை உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் முழுப்பயனை அடைய முடியும். அப்பயன் துன்பமில்லா பேரின்பவாழ்க்கை வாழ்வதற்கு அவசியமானவை ஆகும்.
செய்முறைப் பயிற்சியில் உறுதியுடன் அறிவதற்கு சில காலம் தேவையிருக்கின்றது. அந்தக் காலத்தின் அளவு
புலன்வழி வினைப்பதிவுகளின் அழுத்தம் ஆகியவைகளைப் பொருத்திருக்கும்.
இருப்பினும் ‘நான் யார்’ என்பதனை கருத்தியலாகச் சந்தேகமின்றித் தெளிவுடன் அறிவதால், செய்முறை பயிற்சியில் ஆர்வமும், முயற்சியில் அயரா விடாமுயற்சியும் கைக்கூடும். அதன் விளைவாக புலன் வழி வினைப்பதிவுகளின் வேகமும், அழுத்தமும் சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வர, செய்முறைப் பயிற்சியில் நான் யார் என உறுதியுடன் அறிவதற்கு தேவைப்படும் காலம் சுருங்கி வரும்.அதாவது அகத்தவத்தின் முடிவு விரைவில் கைகூடிவிடும்.
ஒரு மனிதன் வாழ்க்கையை நான் யார் என அறிவதற்காக பயன்படுத்தாத போது, இயற்கையின் நோக்கத்தை அறியாது, அறியாமையில் வாழும்போது இயற்கைக்கு முரணான வாழ்க்கைதான் வாழமுடியும். இயற்கைக்கு முரணாக வாழும் போது இயற்கையின் இனிமை கெடும். இயற்கையின் இனிமையைக் கெடச்செய்தால் விளைவுகளும் துன்பங்களாகத்தானே (miserable life) வரும். பிறவிப்பிணிக்கு ஆளாகிமீண்டும் மீண்டும் பிறவி எடுத்து இதே miserable life ஐத்தான் வாழ வேண்டி வரும். அல்லது வம்சாவளியின் வழியாக துன்பம் தரக்கூடிய விளைவுகள் வரநேரிடும்.
எந்த ஒரு பயனையும் அனுபவிக்க வேண்டுமென்றாலும் அதற்கான செயல் புரிந்தேயாக வேண்டும். நான் யார் என அறிந்து அதன் பயனை அடைவதற்கு மனவளக்கலையாகிய அகத்தவமும், தற்சோதனைப் பயிற்சியும் அவசியம். ‘நான் யார்?’ என அறிதலின் பயனை விரிவாகத் தெரிந்து கொள்வதால், பயிற்சி செய்வதற்கான ஊக்கமும்,ஆக்கமும் வரும். ஏனெனில் மனித மனம் ஆதாயமில்லாமல் எதனையும் விரும்பாது (human mind is so calculative) என்பதால், நான் யார் அறிதலின் பயனை அறிந்து கொள்வது பயனளிக்கும். ஆகவே நான் யார் என அறிதலின் பயன்களையும், அறியாதலால் துன்பங்களையும் அறிய வேண்டும். நான்யார் என அறிதலின் லாபமும், அறியாததன் நஷ்டமும் “லாபமும், நஷ்டமும்” என்கின்ற தலைப்பில் அட்டவணைப்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இறைவனை அறிவதை விட வேறு என்ன லாபம் உள்ளது? மற்ற லாபங்களெல்லாம் இதற்கு துணை இலாபங்களே.
இங்கே ஆதிசங்கரரின் கூற்றை நினைவு கூறுவோம்.
எது லாபம் என சொல்லத் தக்கது?
ஆன்மாவை அறிதல் என்கிறார் ஆதிசங்கர்.
அறிவு இருந்தும், அறிய வேண்டியதை அறியாமல் இருப்பதால் மயக்க நிலைதான் சாதாரண மனிதனிடம் காணப்படுகின்றது. இதனால் தனக்கும் இழப்பு. அவ்விழப்பால், பிறருக்கும் (சமுதாயத்திற்கும்) நஷ்டம் தானே.
இழப்பால் துன்பம் தானே!? தனி மனிதனுக்குத் துன்பம் இருக்கும் போது சமுதாயக் கூட்டுறவில் வாழும் அம்மனிதனால் பிறருக்கும் துன்பம் போய்ச்சேரும் .
இங்கே ‘ஒன்றே பலவானதை’ எடுத்துச் சொல்லும் அத்வைத தத்துவத்தை உலகுக்கு வெளிக்கொண்டுவந்த ஜகத்குரு ஆதிசங்கரர் என்ன அருளுகிறார் என்பதனை கவனிக்க வேண்டும்.
“நான் பிரம்மம் அல்ல என்பது அறியாமை. அந்த அறியாமையே எல்லா துன்பங்களுக்கும் ஆணிவேர்”
. . . ஆதிசங்கரர்.
இறைவனை அறியாமலேயே வாழ்க்கை முடிந்து விடுகின்றது.
அறியவேண்டியது அறியாமலே வாழ்க்கை முடிந்து விடுகின்றது.
அறிய வேண்டியதை அறியாமல் வாழ்க்கை முடிந்து விடுவது என்பதா வாழ்ந்ததன் லாபம்!?
அடைய வேண்டியதை அடையவில்லை அல்லது அடைய முயற்சி செய்யவில்லை என்றால் அது இழப்பு தானே? நஷ்டம் தானே?
நஷ்டம் ஏற்பட்டால் அறிவிற்கு கவலை தானே?
கவலை என்பது துன்பத்தின் விளைவு தானே?
ஆகவே ஜகத்குரு ஆதிசங்கரர் அறியாமை எல்லாத் துன்பங்களுக்கும் ஆணிவேர் என்று எவ்வளவு உண்மை என்பது விளங்குகின்றது.
வருங்காலத்தில் விஞ்ஞானம் வேகமாக வளர்ந்துவரும் இக்காலத்தில் மனிதர்கள் அனைவருமே விஞ்ஞானத்தின் துணைகொண்டு எளிதாக தான் யார் என மிகத்தெளிவாக அறியும் நிலை உருவாகி வந்து கொண்டுதான் உள்ளது மனவளக்கலையால் என்றால் அது மிகையாகாது.
எனவே நீதிநெறி உணர்மாந்தராகி வாழும் நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்.
எல்லாம் வல்ல தெய்வமது. எங்கும் உள்ளது நீக்க மற. சொல்லால் மட்டும் நம்பாதே. சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்!”
— வேதாத்திரி மகரிஷி
பயிற்சி—
1. தெய்வம் பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதை அப்படியே நம்புவது சரியில்லையா?
2. மகரிஷி அவர்கள் கூறுவதை நம்பவேண்டாம் என்று அவரே எச்சரிப்பது வியப்பாக இருக்கின்றதல்லவா?ஏன் அவ்வாறு கூறுகின்றார்?
3. காரணம் இல்லாமலா இருக்கும், சிந்திப்போம். அந்தக் காரணத்தை அறிவதற்கும் சிந்திப்போம் என்றுதான் கூறுகிறோம்! ஆறாம் அறிவின் உச்சமான சிறப்பான சிந்தனை ஆற்றல் தடத்தை(pondering channel) திறக்கச் சொல்கிறாரா வேதாத்திரி மகரிஷி அவர்கள்?!
4. தெய்வம் பற்றி கூறிவிட்டு ஏன் சுயமாக சிந்தித்துத் தெளிவு பெறச்சொல்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?
5. சிந்தித்தல் என்றால் எவ்வாறு சிந்திக்க வேண்டும்? அதனைக் கூறவில்லையே! எங்கிருந்து சிந்தித்தலை ஆரம்பிக்க வேண்டும்? எங்கு முடிக்க வேண்டும்?
6. முதலில் சிந்தித்தல் மீது தீராத ஆர்வம் கொள்ள வேண்டுமல்லவா?
7. அன்னமய கோசம், மனோமய கோசம் ஆகிய இரண்டில் மட்டுமே இயங்கும் எண்ணத்தை பிராணமயகோசத்திற்கு கொண்டு வந்து பிறகு விஞ்ஞாணமயகோசத்திற்கு கொண்டு வருவதற்கு சுயமாய்ச் சிந்திக்கச் சொல்கிறாரா?
7. சிந்தித்தலை அவர் எவ்வாறு ஆரம்பித்தார் என்பதனைக் கவனித்தால் நாமும் சிந்தித்தலை அவ்வாறே ஆரம்பிக்கலாம் அல்லவா?
8. சிறு வயதிலேயே அவருக்குள் எழுந்த மகானாக்கிய நான்கு மகோன்னத கேள்விகள் இருக்கின்றனவே. அவற்றையே நாம் சிந்தித்தலுக்கு ஆரம்பமாக வைத்துக் கொள்ளலாமன்றோ?
9. சிந்தித்தலால் தெளிவு பெறச்சொல்கிறார். நம்பிக்கை வேறு, தெளிவு வேறா? தெளிவு என்றால் என்ன? தெளிவின் பயன் என்ன?
10. தெய்வம் பற்றி அறிவதற்கு மட்டுமா சிந்தித்தலை பயன்படுத்த வேண்டும்? மானுடவியலைப் பற்றி அவர் கூறியவற்றை உறுதிபடுத்துவதற்கும் பயன் படுத்தவேண்டுமா?
11. சிந்தித்தலை எவ்வாறு அவரிடமிருந்து கற்றுக்கொள்வது? அவருடன் இணைந்தால் கற்றுக்கொள்ள முடியுமா?
12. இப்போது அவர் இல்லையே இப்புவியில்! எவ்வாறு அவருடன் இணைந்துகொள்வது?
13. அவருடைய சிந்தனை ஆற்றலைப் போற்றி, மகிழ்வுற்றால் அவருடன் இணைப்பு கிடைத்துவிடுமா?
14. தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர் வாழ்ந்த காலத்தில் பிறவாத மகரிஷி அவர்கள் எப்படி அம் மூவரையும் குருமார்களாகக் கொண்டார்?
15. அதே யுக்தியை நாமும் பயன்படுத்தலாமன்றோ?!
16.எவ்வளவு காலம் தேவை தெய்வத்தைப் பற்றி சுயமாய்ச் சிந்திக்க ஆரம்பித்து சிந்தித்தல் முடிந்து தெளிவு பெறுவதற்கு? சிந்தித்தலுக்கு முடிவு என்று ஒன்று இருக்கின்றதா?
16.1.ஒரு நொடி போதுமா?
16.2. ஒரு மணித்துளி போதுமா?
16.3. ஒரு வாரம் போதுமா?
16.4. ஒரு மாதம் போதுமா?
16.5. ஒரு வருடம் போதுமா?
16.6. இந்தப்பிறவிக்காலம் போதுமா?
16.7. செயலற்று/உறங்குகின்ற(dormant) சிந்தினை ஆற்றல் தூண்டப்பட்டு விழித்தெழுவதைப் பொருத்து கால அவகாசம் மாறுபடுமா?
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.
Unnötiges Drucken verursacht nicht nur unnötige Kosten für Papier und Tinte/Toner. Produktion und Transport dieser Verbrauchsmaterialien hat auch negative Auswirkungen auf die Umwelt. Jede nicht ausgedruckte Webseite hilft die Papierverschwendung zu reduzieren und damit die Umwelt zu entlasten.
Benutzen sie statt dessen bitte den PDF-Download auf der Seite, die Sie drucken wollten.
Powered by "Unprintable Blog" für Wordpress - www.greencp.de
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.