admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 88

    வாழ்க மனித அறிவு                            வளர்க மனித அறிவு

    04-07-2015—சனி

    நாம் உழைக்காவிட்டால் நாட்களும் புனிதமாகாது. வாழ்வும் புனிதமாகாது. உழைக்க உழைக்கத்தான் வாழ்க்கையும் புனிதமாகும்.

    …… அறிஞா் ரஸ்டன்

    பயிற்சி—

    1) சென்ற சிந்திக்க அமுத மொழியில் சொல்லப்பட்ட மகாத்மா காந்தியின் அமுத மொழியும், இந்த அமுதமொழியில் சொல்லப்படுகின்ற அறிஞர் ரஸ்டன் அவர்களின் அமுத மொழியும் ஒத்திருக்கின்றதா?
    2) புனிதம் என்றால் என்ன? நாட்களும், வாழ்வும் புனிதமாகாது என்கிறாரே! என்ன பொருள்?
    3) நாட்களும், வாழ்க்கையும் புனிதமானால் என்ன பயன்?
    4) புனிதமாகவிட்டால் என்ன இழப்பு?

    வாழ்க அறிவுச் செல்வம்                                              வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 87

    வாழ்க மனித அறிவு                                                    வளர்க மனித அறிவு

    03-07-2015—வெள்ளி

    “காலத்தை, நேரத்தை வீணாக்கினால், அவர் இரக்கமற்ற முறையில் தண்டிக்கப்படுவர்“

    ….. மகாத்மா காந்தி

    பயிற்சி—

    1) ஏன் அவ்வாறு கடுமையாக எச்சரிக்கிறார்? உண்மையில் அவ்வாறுதான் நடக்கின்றதா?
    2) வாழ்க வளமுடன். யாரும் இக்குற்றத்திற்கு ஆளாக வேண்டாம். ஒரு வேளை அப்படிக் குற்றத்திற்கு ஆளாகி இப்போது உணர்ந்தால் அவா்களின சங்கல்பமும், முயற்சியும், பயிற்சியும் எவ்வாறு இருக்க வேண்டும்?
    3) வேறு அறிஞர்கள் இது பற்றி என்ன கூறி இருக்கின்றனர்?

    வாழ்க அறிவுச் செல்வம்                                      வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-86

    வாழ்க மனித அறிவு                                     வளர்க மனித அறிவு

    02-07-2015 – வியாழன்

    தன்முனைப்புக்கு இடமில்லாத இரண்டு இடங்களாக எவற்றைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள், ஏன்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                வளர்க அறிவுச் செல்வம்

    Loading