இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?
FFC- 62 (1/?)
04-03-2015 –புதன்
வாழ்க வளமுடன்,
சிந்திப்பதற்கு, மேலே உள்ள தலைப்பை இன்று எடுத்துக் கொண்டதற்கான காரணம், நமது இணையதள சத்சங்கத்தில் கலந்து கொள்கின்ற ஒர் அன்பர் அனுப்பியுள்ள ‘கருத்துரைக்க’ பகுதியில், கேட்டிருந்த சிந்தனைக்குரிய வினாவே ஆகும். உங்கள் சார்பாக, www.prosperspiritually.com, அவருக்கு நன்றியினையும் மற்றும் அவரது ஆன்மதாகத்தைப் போற்றி, அவருடைய ஆன்ம தாகம் மேன்மேலும் வளர ஆத்மார்த்த வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.
அவ்வையாரின் அறிவாற்றலை வணங்கி சிந்தனையைத் தொடங்குவோம்.
இப்போது தலைப்பிற்குள் செல்வோம். அறிவில் அறிவாய் நிலைத்து, அறம் வகுத்து, அதனை வாழ்ந்து காட்டிய அனைத்து அருளாளர்களுடைய மற்றும் அருளாளர்களின் வரிசையில் நமக்குத் தெரிந்து, கடைசியாக அவதரித்த அருளாளரும் நம்முடைய குருதேவருமாகிய வேதாத்திரி மகரிஷி அவர்களின் அறிவாற்றலும் வெகுவாக துணை நிற்குமாக. வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம். அருளாளா்களையெல்லாம், கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி, போற்றி வணங்குவோம்.
தலைப்பில் இரண்டு வினாக்கள் உள்ளன. முதல் வினாவிற்கான பதில் மகான்கள் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.எவ்வாறு? உடல்தான் மீண்டும் பஞ்சபூதங்ககளாக மாறியதே தவிர ஆன்மாவிற்கு அழிவேது? இரண்டாவது வினாவிற்கான பதில், மகான்கள், நம்முடன்(சமுதாயத்துடன்) இரவு பகல் என்று பாராமல் எப்போதும் பேசிக் கொண்டிருக்கின்றனர்; அருளுரை ஆற்றிக் கொண்டிருக்கின்றனர். அவற்றை மகான்கள் எவ்வாறு ஆற்றுகின்றனர்என்றும், அவற்றைச் செவிசாய்த்து பயன்பெறும் யுக்தியினை அறிந்து செயலில் கொண்டுவருவதற்கே இன்றைய சிந்தனையாகும்.
மகான்கள் நம்முடன்(சமுதாயத்துடன்) பேசிக் கொண்டிருக்கின்றனர், அருளுரை ஆற்றுகின்றனர் என்றால் என்ன பொருள்? அவர்கள் பூதவுடலோடு வாழ்ந்த காலத்தில் எண்ணிய எண்ணங்கள் இறக்கவில்லை. வான் காந்தக் களத்தில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. மேலும் அருளாளர்கள் அருளியுள்ள அறிவுரைகளைக் கொண்ட அறநூல்கள் இப்புவி உள்ள வரை வாழ்ந்து கொண்டிருக்கும். அந்த அறநூல்கள் ஒழுக்க நெறியையும், அவற்றைப் பின்பற்றுவதால் அடையும் பயன்களையும் இயம்பிக் கொண்டுதான் இருக்கின்றன. இதனை ‘அறநூல்கள் வாயிலாக மகான்கள் பேசிக் கொண்டுதான் இருக்கின்றனா்’ என்று சொல்லக் கூடாதா? இப்போது மகான்களிடம் இணைப்பு பெற்று பயன்பெறுவது பற்றி அறிவோம்.
மகரிஷி அவர்கள் தனது 35 (1911+35=1946) வயதிற்குள்(around) இறை உணர்வு பெற்றுவிட்டார். அதாவது, இறையானது, தன்னுடைய நிலையை, இவ்வுலக மக்கள் எளிமையாக விளங்கிக் கொண்டு, அனைவரும் உய்யவேண்டும் என எண்ணி, நம் குருதேவரை இறைத்தூதுவராக்கி, இவ்வுலக மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் எனக்கருதி, தன்னுடைய உண்மையான முழுவிலாசத்தையும், தன்னுடைய முழுச்சரித்திரத்தையும் உண்மை மாறாமல், மகரிஷி அவர்களுக்குத் தெள்ளத் தெளிவாக விளக்கிவிட்டது. மகரிஷி அவர்கள் இக்குருவணக்கப் பாடலை எழுதியது 1981 ஆம் ஆண்டு. அதாவது, அவர், தன்னிலை விளக்கம் பெற்று 35 வருடங்கள் சென்ற பிறகு இந்த குருவணக்கப் பாடலை இயற்றியுள்ளார். நோக்கம் என்ன? 35 வருடங்கள் கழித்து எதற்காக எழுதினார்?
இப்பாடலில் கூறியுள்ள வழியின் வாயிலாக, பயனை, தான் அனுபவித்ததோடு அல்லாமல், மகரிஷி அவர்களின் நேரிடை காலத்து மாணவர்களுக்காகவும், வருங்காலத்தில் வருகின்ற உலக மக்கள் அனைவருக்கும் பயன் பெறும் வகையிலே முப்பத்து நான்கு வருடங்களுக்கு முன்னர் 11-08-1981 அன்று, அறிவியல் அடிப்படையிலும், அறிவுப்பூர்வமாகவும் ஒரு யுக்தியினை அருளியுள்ளார். 1911 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை நடக்கின்ற அருள் நிகழ்வுகளை சில கட்டங்களாக பிரித்து ஆராய்வோம்.
மகரிஷி அவர்கள் அவதரித்த ஆண்டு 1911
மகரிஷி அவர்கள் தன்னிலை விளக்கம் பெற்றது 1946 (around)
மகரிஷி அவர்கள் குருவணக்கப் பாடல் இயற்றியது 1981
மகரிஷி அவர்கள் குருவின் சேர்க்கை பாடல் இயற்றியது 1984
மகரிஷி அவர்கள் 1953 ஆம் ஆண்டிலிருந்து கவிகளை எழுத ஆரம்பித்துள்ளார் எனத் தெரிகின்றது. ஆனால் கவிகள் எழுதும் பழக்கம் கொண்ட அவர், 1953 க்குப் பின் 28 ஆண்டுகள் சென்ற பிறகு, இக்குருவணக்கப் பாடலை இயற்றியுள்ளார். இப்போது, ஒவ்வொரு கால கட்டத்தின் சிறப்பையும் கவனிப்போம்.
1911 – 1946 — சுமார் தனது 35 வயதில் (1946) மகரிஷி அவர்கள், தன்னிலை விளக்கம் பெற்றது.
1946 – 1981 — உலக சமுதாய சேவா சங்கம் ஏற்படுத்தப்பட்டு உலக மக்களுக்கு தன்னிலை பெறுவதற்கான கருத்தியல் பாடமும், செய்முறைப் பாடமும் போதிக்கப்பட்டு வந்தன; இப்போதும் போதிக்கப்பட்டு வருகின்றன.
1981 இல் ‘குருவணக்கம்’ – பாடல் இயற்றப்பட்டுள்ளது. பயிற்சியாளர்கள் பயிற்சியின் முடிவு(result) அடையும் காலத்தைத் துரிதப்படுத்துவதற்கு, இது ஒரு யுக்தி எனக்கொள்ளலாம்.
1984 இல் ‘குருவின் சேர்க்கை’ – பாடல் இயற்றப்பட்டு, ஏற்கனவே அறிவித்த யுக்தியைவிட அதியுக்தியை அறிவித்தது வேதாத்திரியம். அது என்ன? முதல் யுக்தியில், எல்லா அறிவினரையும் நினைவிற் கொண்டுவந்து அவர்களை வணங்கி அவர்களுடைய வாழ்த்தையும், காப்பையும் பெறுவதற்கு பிரார்த்தனை (invocation) செய்தல். இரண்டாவது யுக்தியானது “அறிவினரைச் சோ்தல் இனிது. அதனினும் இனிது அறிவினரைக் கனவிலும் நினைவிலும் காண்பதுதானே” என்று அவ்வையார் மொழிந்துள்ளதை பயன்படுத்திக் கொள்ளுதலாகும்.
1984 ல் அறிவிக்கப்பட்ட இந்த இரண்டாவது யுக்தியானது, ஆன்மீகப் பயிற்சியாளர் இறையின் முத்திறங்களில் ஒன்றான, இயல்பூக்கத்தையே பயன்படுத்தி. இறையை உணர்வதற்கான தர மாற்றங்களை அடைவதற்கான வழியினைச் சொல்கின்றது. இங்கே பிறவிப்யனை எய்துவதற்கு, சாதகன் செயல்படுத்த வேண்டிய பொறுப்புகள் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. அப்பாடலையும் இங்கே நினைவு கூர்வோம்.
1981 – 1984 – 2015 வரையிலான காலம் முக்கியத்துவம் பெறுகின்றது. இக்காலகட்டம் அக்குருவணக்கப் பாடல் மற்றும் ‘குருவின் சேர்க்கை’ பாடலில் தெரிவித்துள்ள வழியாகப் பயனை அடைந்த காலம் என்றே சொல்ல வேண்டும்.
2015 முதல் இனிவரும் காலத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், இக்காலத்தில் ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதற்கிணங்க, இறைத்தூதர் மகரிஷி அவா்களின் துணை—இறைத்தூதுவர்களான நம்மிடம், இறை, பொறுப்பை ஒப்படைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும். வேதாத்திரியத்தை பள்ளியிலிருந்து பல்கலைக்கழகங்கள் வரை கல்வியாக எடுத்துச் சென்றுள்ளதே, அந்த பொறுப்பினை நிறைவேற்றி வருவதற்கு சான்று.
மனம் எந்த இரண்டை அடைந்தால், வாழ்வின் குறிக்கோளை அடைய முடியும் என்கிறார் மகரிஷி அவர்கள்? அந்த இரண்டும் மனதிற்கு எப்போது கிட்டும் என்கிறார் மகரிஷி அவர்கள்?
சென்ற அறிவிற்கு விருந்தில் வெளியிலிருந்து நொறுங்கியத் துகள்கள், ஒழுங்குடன் விண்களாகி, அந்த விண்கள், புரோட்டான்கள், நியூட்ரான்கள், எலக்ட்ரான்கள் ஆகி பின்னர் அணுவாகியதற்கான(chemical atom) காரணம் அறிவாகிய ஒழுங்காற்றல் என்று அறிந்தோம். இன்றைய விருந்தில் “தெய்வம் தூணிலும் இருக்கின்றது, துரும்பிலும் இருக்கின்றது”, என்பது எவ்வாறு சாத்தியம் என அறிய இருக்கிறோம்.
மனிதனின் செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு எனும் இயற்கைநீதி கூட, எங்கும் எதிலும் அறிவு இருப்பதால்தான் சாத்தியமாகின்றது. இறை எல்லாவற்றையும் அறியக்கூடியது என்பதுகூட, இறையாக அறிவே உள்ளதால்தான் சாத்தியம். அதனால்தான் இறைக்கு ‘பேரறிவாளன்’ என்கின்ற பெயரும் உண்டு. மனிதன் செய்கின்ற ஒருசில செயல்களுக்குரிய விளைவுகள் உடனே வரலாம். உதாரணத்திற்கு சூடான பாத்திரத்தைத் தொட்டால், தொட்ட விரல் உடனே புண்ணாகிவிடும். இங்கே விளைவு உடனே வருகின்றது. விளைவுகள் உடனேதான் வரவேண்டும் என்பதில்ல; சூடான பாத்திரத்தைத் தொட்டதற்கு வரும் உடன்-விளைவு போல் அல்லாமல் சில மணிநேரங்கள் கழித்தோ, சில நாட்கள் கழித்தோ அல்லது சில வருடங்கள் கழித்தோ, ஏன் இந்த தலைமுறையில் வராமல் வம்சாவளிக்கு கூட வரலாம். செயலுக்குரிய விளைவு வருவதற்கு, தக்க சூழ்நிலைகளும், உகந்த காலமும், வேறு மனிதர்களும் தேவைப்படுவதால் விளைவு உடனே வருவதில்லை. விளைவைத் தருவதற்கு உகந்த நேரத்தையும், சூழ்நிலையையும். தக்க மனிதஅறிவையும், அதாவது தக்க மனிதரையும் தேர்ந்தெடுப்பது, எங்கும் எதிலும் அறிவு இருப்பதால்தான் சாத்தியமாகின்றது. ‘No action will go waste’ என்பார் மகரிஷி அவர்கள். அறிவு எங்கும், எதிலும் இருப்பதால்தான் எந்த செயலும் அதற்குரிய விளைவைத் தராமல் இருப்பதில்லை. அல்லது வீணாவதில்லை.
மின்சாரம் ஒரு வகையான ஆற்றல். மின்சாரம் ஆற்றலாக இருந்தாலும், அதுவே தானாகவே செயல்படாது. அதனை சரியாக இயக்க மனித அறிவு தேவைப்படுகின்றது. ஆயிரம் பேர் பணிபுரியும் தொழிற்சாலையில், பணிகளைக் கண்காணிக்க எத்தனை கண்காணிப்பாளர்கள் தேவைப்படுகின்றனா்? அங்கேயும் கண்காணிப்பாளர்களின் அறிவுதான் கண்காணிக்கும் பணியைச் செய்கின்றது.
அது போல், பூமியில் மக்களாட்சியில் ஆட்சி நடப்பது போல், ஆட்சி ஏதும் இல்லாமல், ஆளுகின்ற ஐயன், எங்கும் அறிவாக இருப்பதால்தான் அவன், சம்பிரதாய முறைப்படி ஆட்சி இல்லாமலேயே இப்பிரபஞ்சத்தை எந்தவித ஆரவாரமில்லாது ஒழுங்குடன் இயக்கி வருகிறான்.
‘பேரின்பக் களிப்பு’ என்கின்ற பாடலில் மகரிஷி அவர்கள் கூறும் ஒரு வரியினைக் கவனிப்போம். கோடானு கோடி நட்சத்திரங்களைக் கொண்ட அண்டம் இயங்கி வருவதை,
“ஆட்சியின்றி ஆளுகின்ற ஐயன் திருவருளால்” என்று
இறையின் இயக்கத்தை புகழ்ந்து பாடுகிறார்.
ஒழுங்காற்றலாகிய பேரறிவே மனிதனிடம் அறிவாக இருப்பதால் மனிதனின் நடவடிக்கைகள் ஒழுங்காக இருக்க வேண்டும் என்கின்ற இயற்கை நீதியும் மனிதனிடம் எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது மனிதனுக்கு அவனுடைய முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் ஒழுக்கம் மிக மிக அவசியமாகின்றது. இல்லையெனில் மனிதனின் நடவடிக்கைகளுக்கேற்றபடி விளைவுகள் துன்பமாகவோ அல்லது இன்பமாகவோ வரும். எல்லாமே தெய்வமாக இருந்தாலும், ஆதிநிலையில் வெறும் ஆற்றலுடன் அறிவு எனும் சிறப்பு இல்லாமல் இருந்திருந்தால், வெளியாகிய தெய்வம் எல்லாமாகவும் ஆகியிருக்க முடியாது. வெளியின் தன்மைகளை பிரித்துப் பார்க்காமல், ஒரே பொருளாகப் பார்க்கும்போது, அறிவின் பணி மேலோங்கி நிற்பதால் அறிவையே தெய்வம் என்கின்றனர். அவ்வாறில்லாமல், வெளியே எல்லாத் தோற்றங்களாகி உள்ளது என்பதால், ‘வெளியே தெய்வம்’ என்பதற்கும், ‘எல்லாமே தெய்வம்’ என்பதற்கும்
அல்லது இறைவெளியின் மற்ற தன்மைகளைக் கொண்டு. ‘வற்றாயிருப்பே தெய்வம்’ என்பதற்கும், ‘பேராற்றலே தெய்வம்’ என்பதற்கும், ‘காலமே தெய்வம்’ என்பதற்கும்,
இறைவெளியின் தன்மை பேரறிவு என்பதாலும், மற்றும் ‘நான் யார்?’ என்கின்ற வினாவிற்கு விடை ‘அறிவே நான்’ என்பதால்,
‘அறிவே தெய்வம்’ என்பதற்கும்,
உணர்வில் ஏற்படும் வித்தியாசங்களைக் கவனிக்க வேண்டும்.
‘பேராற்றலே தெய்வம்’ என்று கூறுவதால் தெய்வத்திற்கும் மனிதனுக்கும் உள்ள உறவு மறந்து போகின்றது. தெய்வம் அன்னியமாகிவிடுகின்றது.
அறிவே தெய்வம் என்கின்றபோது, நம்மிடமுள்ள அறிவும், மற்றவர்களிடமுள்ள அறிவும் ஒன்றாகிவிடுவதாலும், உலக மக்கள் அனைவருக்கும் ஆதிநிலையே மூலம் என்பதாலும் உலகசகோதரத்துவம் (universal brotherhood) என்பது நிதர்சனமாகின்றது.
எவ்வாறு?
அறிவு அரூபமாக உள்ளதால் எல்லோருடைய அறிவும் ஒன்று என்றாகிவிடுகின்றது. எவ்வாறு எனில், அரூபத்தில் ஒன்றிற்கு மேல் இருக்க முடியாது. அரூபத்தில் வெவ்வேறு அரூபங்கள் இருக்க முடியுமா? உருவம் ஒன்றிற்கு மேல் இருக்க முடியும். ஆனால் அரூபமாக உள்ள அறிவில் வேறுபாடுகள் கிடையாது. இதனை வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளிய மெய்விளக்கம் என்கின்ற தலைப்பின் கீழ் வரும் பாடலின் முதல் இரண்டு வரிகள் சத்தியத்தை உறுதி படுத்துகின்றன.
ஆகவே அறிவு ஒன்றாகிவிடுவதால் உலகசகோதரத்துவம் (universal brotherhood) என்பது நிதர்சனமாகின்றது. மேலும் தனிமனித மனித அறிவுகள் எல்லாம் (மக்கள்) ஒன்று என்பதாலும், அறிவே தெய்வம் என்பதாலும் தெய்வமும் ஒன்றுதான் என்றாகிவிடுகின்றது. தெய்வமே எல்லோருமாக – எல்லா உயிர்களாகவும் இருக்கின்றதை அறிந்து கொள்ளமுடிகின்றது. திருமூலர் வாக்கு “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எவ்வாறு என்பது என மீண்டும் உறுதி படுத்துகின்றது.
மேலும் மானுட அறிவும், மானுடத்தைத் தவிர மற்ற உயிர்களிடத்திலும் உள்ள அறிவும் ஒன்று என்பதால் ஒருமை உணர்வே, மேலோங்கி நிற்கின்றது.
“தெய்வம் தூணிலும் இருக்கிறது, துரும்பிலும் இருக்கின்றது” என்றால் உருவமுள்ள தெய்வமா தூணிலும் துரும்பிலும் இருக்க முடியும்?
உருவமுள்ள தெய்வம் எவ்வாறு தூணிலும், துரும்பிலும் இருக்க முடியும்? உருவமான தெய்வம், தூணிலும் துரும்பிலும் இருக்க முடியாது என்பது சரி. பின்னா் தெய்வம் தூணிலும் துரும்பிலும் எவ்வாறு இருக்கின்றது? எல்லாமே தெய்வம் என்கின்றபோது தூணிலும், துரும்பிலும் தெய்வம் இருந்தாக வேண்டும். தெய்வத்திற்கு உருவமில்லை என்கின்றபோது தெய்வம் அரூபமாக இருக்கின்றது என்று பொருள்.
ஆனால் உருவமில்லா(அரூபமான) தெய்வம் எவ்வாறு உருவமுள்ள தூணிலும், துரும்பிலும் இருக்க முடியும்? உருவமில்லா(அரூபமான) தெய்வம் உருவமில்லா(அரூபமான) அறிவாக இருந்தால்தான், தூணிலும், துரும்பிலும் இருக்க முடியும். ஆகவே “தூணிலும், இருக்கின்றது, துரும்பிலும் இருக்கின்றது தெய்வம்” என்பது, அரூபமாகிய தெய்வம் அரூப ஆற்றலான அறிவாக, ஒழுங்காற்றலாக உயிரற்ற சடப்பொருட்களில் இருப்பதைத்தான் குறிக்கின்றது. தூணிலும், துரும்பிலும் இருக்கின்ற அணுவும் தெய்வம்தானே. அந்த அணுவை நிர்வாகம் செய்து கொண்டிருப்பதும் அறிவாகிய ஒழுங்காற்றல் தானே. ‘அறிவே தெய்வம்’ என்பது சரியாக உள்ளது என்பதனை மேலும் ஒர் உதாரணத்தின் மூலம் அறிந்து கொள்வோம்.
ஒரு குடும்பத்தில் கொள்ளு தாத்தாவிலிருந்து கொள்ளுப் பேரன் வரையில் நான்கு தலைமுறைகள் வசிப்பதாகக் கொள்வோம். நால்வருமே ஒரே வம்சாவளிதான். முருகனின் மகன் கந்தசாமி. கந்தசாமியின் மகன் கோவிந்தன். கோவிந்தனின் மகன் கண்ணன். கண்ணனை ‘நீ யார்?’ என்று கேட்டால் கண்ணன் என்ன பதில் சொல்வார்?
“கோவிந்தனின் மகன்” என்று சொல்வார். அவ்வாறில்லாமல் முருகனின் கொள்ளுப் பேரன் என்றா சொல்வார்?
கண்ணன், மற்ற உறவுகளைவிட, தந்தையிடம் நெருக்கமாகவும், பிரியமாகவும் இருப்பதால், கண்களால் தந்தையைப் பார்த்துக் கொண்டு, குழந்தைப் பருவத்தில் தந்தையின் மடியில் படுத்து உறங்கிய இன்ப நினைவெல்லாம் இருக்கும் போது, நெருக்கமாக உள்ள தந்தையின் பெயரைச் சொல்லி “கோவிந்தனின் மகன்” என்றுதான் சொல்வார். அதாவது இந்த உறவு முறையில் கண்ணனுக்கு அருகிலும், பிரியமானவருமாக இருப்பவர் அவரது தந்தைதான் என்பதால், தந்தையின் பெயரைச் சொல்லி அவருடைய மகன் என்பார். அதேபோல், எல்லாமே தெய்வம் என்பதில் நமது அறிவும் உள்ளடங்கி இருப்பதாலும், அறிவே நம்மை ஆட்சி செய்வதாலும், அறிவை பிரதானப்படுத்தி ‘அறிவே தெய்வம்’ என்பது எவ்வளவு பொருத்தமுடையதாக உள்ளது?
அறிவு மனிதனிடமும் உள்ளதால், அறிவே தெய்வம் என்கின்ற போது, தெய்வத்திற்கும் மனிதனுக்கும் நெருக்கமும், பிணைப்பும் அதிகமாகி, மனிதனாக திருந்த வேண்டிய பொறுப்பும் அதிகமாகின்றது. மனிதனிடம் உள்ள அறிவு தெய்வம் என்கின்றபோது, உயிரில்லாமல் அறிவு இல்லை என்பதாலும், மனம் இல்லாமல் அறிவு எதனையும் உணர முடியாது என்பதாலும், உயிர், மனம், அறிவு ஆகிய முன்றுமே தெய்வத்தின் அம்சம் என்றாகின்றது. அப்படியிருப்பதால்தான் திருமூலர் கூறும் “உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்” என்பது மனிதனுக்கு எப்போதும் நினைப்பில் இருந்து கொண்டு, தற்சோதனை இயல்பாகி, மனத்தூய்மை கைவரப்பெறும்.
அதுபோல், ‘எல்லாமே தெய்வம்’ என்பதில் அறிவும் ஒன்றாகவும், அதுவே தானாகவும், பிறராகவும், எல்லா உயிர்களாகவும் உள்ளதால் ‘அறிவே தெய்வம்’ என்று தெய்வத்தைச் சுட்டிக் காட்டுவதே மிகச்சிறப்புடையதாக உள்ளது. தெய்வத்திற்கும் மனிதனுக்கும் உள்ள உறவு இதுவரை இல்லாதது போல் இருந்து வந்த நிலைமாறி, ‘அறிவே தெய்வம்’ என்கின்ற போது இதுவரை இல்லாதது போல் இருந்து வந்த உறவு நெருங்கி வருவதை அனுபவிக்க முடிகின்றது.
மேலும் ஒரு உதாரணம். இட்லி, தோசை, ஊத்தப்பம் ஆகிய பலகாரங்களுக்கு எது மூலப்பொருள் அல்லது எதிலிருந்து இட்லி செய்யப்படுகின்றது என்று கேட்டால், என்ன சொல்வோம்? அரிசியினால் ஆனது இட்லி என்போம். ஆனால் உண்மையில் இட்லி வெறும் அரிசியினால் மட்டுமே ஆனது இல்லை. இட்லி மாவில் உளுந்தம் பருப்பும், சிறிதளவு வெந்தயமும் உள்ளது. ஆனால் இட்லி மாவில் அரிசியே பிரதானமாக உள்ளதால், இட்லி, அரிசியினால் ஆனது என்கிறோம். அதுபோல் எல்லாமே தெய்வமாக இருந்தாலும், தெய்வம் பிரதானமாக அறிவாகவும் உள்ளதால் ‘அறிவே தெய்வம்’ என்கிறோம். நமது அறிவும், ‘எல்லாம் தெய்வம்’ என்பதில் ஒன்றாகவும், அந்த அறிவுதானே இந்த கேள்வியினைக் கேட்கின்றதாகவும் இருப்பதால் ‘அறிவே தெய்வம்’ என்பது மிக மிகப் பொருத்தம்.
இந்த உணருகின்ற அறிவில்லாமல் தூயவெளி இருந்திருந்தால் உயிரினம் ஏது? பிரபஞ்சம் தோன்றி அதனால் விளைந்த காந்த தன்மாற்றங்களான அழுத்தம், ஒளி, ஒலி, சுவை மற்றும் மணம் உணா்வதற்காகவேதான் உயிரினங்கள் தோன்றின. ஆதிநிலையில் அறிவே இல்லாதிருந்தால், உயிரினங்களே இல்லாமல் கோடானு கோடி நட்சத்திரங்களைக் கொண்ட பிரபஞ்சம் மட்டும் இயங்கிக் கொண்டிருக்கும். அதில் என்ன சிறப்பு உள்ளது? ஆகவே அறிவுதானே சிறப்புடையது.
ஆகவே அறிவே தெய்வம் என்பது சரி என்கின்ற முடிவுக்கு வருகின்றது அறிவு. வேதாத்திரிய ஆன்மீகத்தின் பல சிறப்புகளில் ஒன்று அறிவைப் பற்றிய இந்த தெளிவு. கி.பி.1911 க்கு முன்னர் அறிவே தெய்வம் என்று வேதங்கள், ஆன்மீக நூல்கள் மற்றும் பல ஆன்றோர் பெருமக்கள் கூறியிருந்தாலும் அறிவு எவ்வாறு தெய்வமாகின்றது என்பது விளங்காமலேதான் இருந்து வந்தது. வேதாத்திரியமும் அறிவைப் பற்றிய இத்துணை விளக்கம் கூறாமல், ‘அறிவே தெய்வம்’ என்று மட்டும் கூறியிருந்தால் வேதாத்திரியமும், நம்மால் தெளிவாகப் புரிந்து கொள்ளாப்படாமலேயே இருந்திருக்கும்.
விஞ்ஞானத்தில், பிரபஞ்ச மூலத்தில், அறிவை எடுத்துக் கொள்ளப்படாத குறையை, வேதாத்திரியம், அறிவை, பிரபஞ்ச மூலத்தில் சேர்த்துக் கொண்டதால் தான் அந்தக் குறை சரிசெய்யப்பட்டு, விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் இணைய வேண்டும் என்று சுவாமி விவேகானந்தரும், உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டினும் எண்ணியதை, கி.பி.1911 க்குப் பிறகு இயற்கை ஈடேற்றியுள்ளது.
வேதாத்திரி மகரிஷி அவர்கள் “அஞ்சுவதேன் துணிந்துரைப்போம். அறிவே தெய்வம்” என்று, பன்மையில், நம்மையும் சோ்த்துச் சொல்வது, மகரிஷி அவர்கள் நமக்கு அளித்துள்ள அறிவின் விளக்கத்தின் எளிமையேதான் காரணம். ஆகவேதான் நாமும் அவருடன் சேர்ந்து, அறிவே தெய்வம் என்பதனை ஏற்றுக்கொள்வோம் என்று அவா் எண்ணி, நம்மையும் சோ்த்து, உறுதியாக அவ்வாறு கூறியிருக்கிறார். ‘தெய்வம், உயிர், அறிவு, மனம்’ என்கின்ற தலைப்பில் இயற்றியுள்ள மகரிஷி அவர்களின் கவியினை நினைவு கூர்வோம்.
எனவே ஆன்மீகத்தில் இருந்த அச்சத்தை நீக்கி, வாழ்க்கையோடு ஆன்மீகத்தை இணைத்து, வாழ்வியல் ஒழுக்கமாக விளக்கியுள்ளது வேதாத்திரியம். எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எந்த மதத்தினராக இருந்தாலும், வாழும் மனிதன் வாழ்வியல் ஒழுக்கத்தை கடைபிடித்துத் தானே வாழ்ந்தாக வேண்டும்.
எனவே உலகப் பொதுமறையான திருக்குறளை தந்தருளிய திருவள்ளுவரை மானசீகக் குருவாகக் கொண்டு, ‘எண்ணமே இயற்கையின் சிகரம்’ என்று கண்டுபிடித்து, ஆன்மீகத்தின் சிகரத்தைத் தொட்டுவிட்ட வாழ்வியல் அறிஞர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியுள்ள
மற்றொரு உலகப் பொதுமறையான ‘வேதாத்திரியத்தை’
வாழ்த்துவோம். வளர்ப்போம் வேதாத்திரியத்தை.
வாழ்க வேதாத்திரியம், வளர்க வேதாத்திரியம்.
‘வாழ்க வேதாத்திரியம்’ என்பது, உலக மக்கள் அனைவருக்கும் வேதாத்திரியம் சென்று சேரவேண்டும் என்கின்ற எண்ண அலைகளை பரப்புவது. வளர்க வேதாத்திரியம் என்பது வேதாத்திரியத்தை இன்னும் எளிமையாக்கி, விரிவாக்கி, விளக்கி, சுருக்கிப் பாடமாக்கி பள்ளிக் கல்வியோடு கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்கின்ற எண்ண அலைகளைப் பரப்புவது. இத்துடன் இச்சிந்தனையை தற்சமயம் முடித்துக் கொள்வோம். வாழ்க வளமுடன். . அடுத்த அறிவிற்கு விருந்தில், ஓர் அன்பர் அனுப்பிய ‘கருத்துரைக்க பகுதியில்’ கேட்கப்பட்ட, ஆழ்ந்த சிந்தனையுடைய வினாவிற்கான விடையை அறிய இருக்கிறோம். வாழ்க வளமுடன்.
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.
Unnötiges Drucken verursacht nicht nur unnötige Kosten für Papier und Tinte/Toner. Produktion und Transport dieser Verbrauchsmaterialien hat auch negative Auswirkungen auf die Umwelt. Jede nicht ausgedruckte Webseite hilft die Papierverschwendung zu reduzieren und damit die Umwelt zu entlasten.
Benutzen sie statt dessen bitte den PDF-Download auf der Seite, die Sie drucken wollten.
Powered by "Unprintable Blog" für Wordpress - www.greencp.de
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.