admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 54

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

     

    07-03-2015—சனி

    வாழ்க்கை என்ற சிறிய தோணியைப் பற்றிக் கொண்டு கடல் போன்ற வினையைக் கடக்க முடியாமல் தத்தளித்துத் தவிக்கும் மனிதன் அதிலிருந்து வெளிவர இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று தவம்; மற்றது அறம்.

    …….வேதாத்திரி மகரிஷி அவர்கள்

    பயிற்சி—
    1) வினைக்கடலிலிருந்தும், மனக் கவலையிலிருந்தும் வெளிவர திருவள்ளுவர் கூறும் அறிவுரைகளை எடுத்துக் கூறும் இரண்டு குறட்பாக்கள் என்ன? 
    2) வினைக்கடலிலிருந்து வெளிவர தவம், அறம் ஆகிய இரண்டும் அவசியம் என்பதில் உள்ள விஞ்ஞானம் என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்       வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 53

    வாழ்க மனித அறிவு         வளர்க மனித அறிவு

     

    06-03-2015—வெள்ளி

    வாழ்க்கைத் தேவைகள் எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக இருக்கின்றனவோ அந்த அளவுக்குத்தான் நிம்மதியும் சாத்தியமாகின்றது. ஒரு தேவை இன்னொரு தேவைக்கு வழி வகுக்கிறது. முடிவில் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதிலேயே வாழ்நாள் வேகமாக கழிந்து விடுகிறது.

    …. பெர்னாட்ஷா

    பயிற்சி—
    1) இதனை ஏற்றுக் கொள்ள முடிகின்றதா?
    2) எல்லோருமேதான் வாழ்கின்றனர். இந்த உண்மையை எல்லோரும் அறிவதில்லை என்பதால் இந்த உண்மையை அறிஞர் பொ்னாட்ஷா கூறுகின்றாரா?
    3) இதே பொருளில் வள்ளுவம் கூறும் குறளை நினைவு படுத்திக் கொள்ளவும்
    4) இதே பொருளில் மகரிஷி அவர்கள் கூறும் அமுத மொழியினை நினைவு படுத்திக் கொள்ளவும்.

    வாழ்க அறிவுச் செல்வம்             வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள் – 52

    வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

    05-03-2015 – வியாழன்

    வாழ்க வளமுடன்.

    உயிரின் படர்க்கை நிலை(extended activity) மனம் எனப்படுகின்றது. படர்க்கை நிலை என்றால் என்ன? விளக்கவும்.

    வாழ்க மனித அறிவு          வளா்க மனித அறிவு

    Loading