admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 315(269)

    வாழ்க மனித அறிவு!                       வளர்க மனித அறிவு!!

    lotus

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 315 (269)

    04-07-2020 — சனி

     

      எப்போது வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்?

     

    நான் யார்? எதற்காக இங்கு வந்துள்ளேன்? என்பதை அறியாத வரை வாழ்க்கை என்பது சாத்தியமில்லை!”

    …. லியோ டால்ஸ்டாய்

    பயிற்சி:

    1. என்ன கூறுகிறார் அறிஞர் லியோ டால்ஸ்டாய்?
    2. வாழ்க்கை என்பது என்ன?
    3. சாத்தியம் என்றால் என்ன பொருள்?  சாத்தியமில்லாதது சாத்தியமாகாது.  சாத்தியமில்லாத ஒன்றினால் பலன் உண்டா? 
    4. ‘சாத்தியம்’ என்றால்  ஆங்கிலத்தில் ‘feasibility, possibility’ என்று பொருளாகின்றது.   ‘வாழ்க்கை என்பது சாத்தியமில்லை’ என்றால் ‘Life is not feasible or not possible’ என்றுதானே பொருள்?   ‘நான் யார்?’ என்று அறியாத மனிதன் வாழ முடியாது அல்லது வாழ்வதில்லை என்றுதானே பொருள்?  நடைமுறையில் சமுதாயத்தில் ‘நான் யார்?’ என்று அறியாத மனிதர்கள் தானே பெரும்பாலும் உள்ளனர்!  அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா?  அவர்கள் வாழ்வது வாழ்க்கையில்லையா?   ‘நான் யார்? எதற்காக இங்கு வந்துள்ளேன்? என்பதை அறியாத வரை வாழ்க்கை என்பது சாத்தியமில்லை!’ என்பதனை என்ன பொருளில் கூறுகிறார் அறிஞர் லியோ டால்ஸ்டாய்? 
    5. எதற்காக நாம் இப்பூவுலகிற்கு வந்துள்ளோம்?
    6. ‘நான் யார்?’ என  அறியாதவரை  வாழ்க்கை சாத்தியமில்லை  எனில் இதுவரை வாழ்ந்தது???   என்னவாகும்?  என்னவாகும்!!!
    7. ‘மாதா பிதா குரு தெய்வம்’ என்கின்ற முதுமொழிப்படி நிகழ்வுகள் தற்பொழுது நடைமுறையில் இல்லாத சமுதாயத்தில் வாழ்ந்து  கொண்டிருக்கின்ற நிலையில் மாதா பிதா செய்த புண்ணியத்தால்  வேதாத்திரி மகரிஷி அவர்களைத் தரிசிக்கவைத்து குருவாக அடையச் செய்த இயற்கையின்/இறையின் நோக்கம்தான் என்னவோ!?  வள்ளலார் கடைசியாக அருளியுள்ள  புனிதச் செய்தியினை  நினைவிற்கொள்வோமாக!   இப்பிறவியிலேயே பயணத்தை  புனிதமாக்குவோம்.  புனிதமாக்குவதோடு, அருட்பிரகாச வள்ளலாருடனும், அவரது நேரிடை ஆன்மத் தொடர்புகொண்ட நம் குருநாதரான வேதாத்திரி மகரிஷி அவர்களுடனும் இணைந்து கொண்டு உயர்தொண்டாற்றி இன்பம் காண்போம்.

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

       அருட்பிரகாச வள்ளலாரின் கடைசிச் செய்தி

    குறிப்பு: 

         அன்பர்களே வாழ்க வளமுடன்! 

    இந்தப் பயிற்சியில் இதுவரை 7 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.  இவ்வளவு வினாக்கள் மட்டும் தான் உள்ளனவா இப்பயிற்சியில் சிந்திப்பதற்கு என ஐயம் எழலாம். இதற்கு மேலும் வினாக்கள் இருக்கும்/இருக்கலாம்/இருக்கின்றன! ஒவ்வொரு வினாக்களுக்குள்ளும் பல துணைக்கேள்விகள் மறைந்திருக்கலாம் (hidden questions). இப்பயிற்சியினை செய்யும்போது மேலும் ஏதேனும் மறைந்துள்ள துணை வினாக்கள் தங்களுக்குள் எழுந்தால் அவற்றையும் சேர்த்து சிந்தித்து விடை கண்டு மகிழவும். சிந்தனைத் திறனை மேலும் மேலும் தினந்தோறும் நொடி தோறும் வளர்த்துக் கொள்ள அன்பு வேண்டுகோள்.  வாழ்க வளமுடன்!

    வாழ்க சிந்தனைச் செல்வம்!  வளர்க சிந்தனைச் செல்வம்!!

     


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 314

    வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 314

    03.07.2020— வெள்ளி

     

    “ஒழுக்கம் என்பது ஒருவனுடைய நெடுநாளைய பழக்கமாகும்”


    – அறிஞர் ஜான் கிட்ஸ்

    பயிற்சி:

    1. என்ன கூறுகிறார் அறிஞர் ஜான் கிட்ஸ் ?
    2. ஒழுக்கத்திற்கும் பழக்கத்திற்கும் என்ன உறவு?
    3. ஒழுக்கத்திற்கும் பழக்கத்திற்கும் உள்ள உறவு ஏன் நெடுநாளையது என்கிறார்?
    4. “இளமையில் கல்” என்கிறார் அவ்வைத்தாய் என்பதற்கும் கவிஞர் ஜான் கிட்ஸ் கூறுவதற்கும் பொருளில் இணக்கம் உள்ளதல்லவா? உள்ளது எனில் எவ்வாறு உள்ளது?
    5. ‘ஒழுக்கவாழ்விற்குபோராடவேண்டும்’ என்று அறிஞர் ரூஸோ கூறியதற்கும் அறிஞர் கிட்ஸ் கூறுவதற்கும் என்ன தொடர்பு?
    6. இரண்டொழுக்கப்பண்பாட்டினை வகுத்துக் கொடுத்த வேதாத்திரி மகரிஷி அவர்கள் பழக்கம் பற்றியும், விளக்கம் பற்றியும் கூறுவது என்ன?
    7. வேதாத்திரிய கல்வியின் நான்கு அம்சங்களில் ஒன்று ஒழுக்கப் பழக்க அறிவு என்பது சரிதானே?!  மனிதன் கல்வி கற்கும் பருவ ஆரம்பத்திலேயே கல்வியில் ஒழுக்கம் கற்றுக் கொடுக்கப்பட்டு  அது பழக்கப்பட வேண்டும் என்றல்லவா கூறுகின்றார்!
    8. “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” என்கின்ற ஆன்றோர் மொழி சரிதானே!
    9. “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்பது நினைவு கொள்ளத் தக்கது தானே?
    10. இருப்பினும் பல்லாயிரம் பிறவிகளில் செய்துள்ள பழிச் செயல் பதிவுகளை (தீயொழுக்கப் பதிவுகளை) ஒரு பிறவியிலேயே மாற்றி அமைக்கலாம் எனக் கூறும் பாடலை நினைவு கூறுவோம் இப்போது.

    வாழ்க திருவேதாத்திரியம்!    வளர்க திருவேதாத்திரியம்!!

     

    குறிப்பு: 

         அன்பர்களே வாழ்க வளமுடன்! 

    இந்தப் பயிற்சியில் இதுவரை 10 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.  இவ்வளவு வினாக்கள் மட்டும் தான் உள்ளனவா இப்பயிற்சியில் சிந்திப்பதற்கு என ஐயம் எழலாம். இதற்கு மேலும் வினாக்கள் இருக்கும்/இருக்கலாம்/இருக்கின்றன! ஒவ்வொரு வினாக்களுக்குள்ளும் பல துணைக்கேள்விகள் மறைந்திருக்கலாம் (hidden questions). இப்பயிற்சியினை செய்யும்போது மேலும் ஏதேனும் மறைந்துள்ள துணை வினாக்கள் தங்களுக்குள் எழுந்தால் அவற்றையும் சேர்த்து சிந்தித்து விடை கண்டு மகிழவும். சிந்தனைத் திறனை மேலும் மேலும் தினந்தோறும் நொடி தோறும் வளர்த்துக் கொள்ள அன்பு வேண்டுகோள்.  வாழ்க வளமுடன்!

    வாழ்க சிந்தனைச் செல்வம்!  வளர்க சிந்தனைச் செல்வம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


    Loading

  • சிந்திக்க வினாக்கள்-310

    வாழ்க மனித அறிவு!                                                                   வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க வினாக்கள்-310

                                            

    02-07-2020 – வியாழன்

    பயிற்சி:

    1. ஆறறிவு உடைய மனிதனை மனிதன் என்ற உருவினிலே மாக்கள் உண்டு மக்கள் உண்டு* என்பதனை  எதன் அடிப்படையில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கண்டுபிடித்துள்ளார்?
    2. விலங்குகளிலிருந்து மனிதன் வந்துள்ளதால் அவனிடம்  விலங்குகளுக்கே உரிய பிறர் வளம் பரித்தல் குணம் தொடர்வதால்  மனிதர்களை இரண்டாகப் பிரித்து அவ்வாறு கூறுகின்றாரா?
    3. இந்தக் காரணமட்டுமன்றி  வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா?
    4. அப்படி உண்டென்றால் அவை என்னென்ன?
    5. அல்லது ஆன்மாவின் ஐந்து கோசங்களை வைத்து அவ்வாறு கூறுகின்றாரா?
    6. அப்படி கூறுகின்றார் என்றால் ஐந்தறிவு சீவன்கள் எந்தெந்த கோசங்களில் மட்டும் இயங்குகின்றன? ஆறாம்  அறிவு எந்தெந்த கோசங்களில் இயங்க வேண்டும்? பெரும்பாலும் மனித அறிவு எந்த கோசத்தில் இயங்குகின்றது?
    7. கோசங்களில் கடைசி கோசம் என்ன?  அந்த கோசத்தில்  எந்த ஆன்மாவின்  அறிவு இயங்குகின்றது?
    8. ஏன் இந்த கோணத்தில் சிந்திக்க வேண்டும்?  இவ்வாறு சிந்தித்தலின் பயன் என்ன? 
    9. திருவேதாத்திரியத்தினை ஆழமாகவும், தெளிவாகவும் புரிந்துகொண்டு                   

                9.1. பேரின்பம் அனுபவிக்கவும் ,

                9.2. ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்கின்ற  மனிதனின்  இயல்பான எண்ணம் நன்றியுணர்வின்பொருட்டு  எழுவதனை செயலாக்கவும்,

                9.3  தான் புரிந்துகொள்ளும் அதே வேளையில்  சமுதாயத்திற்கு   எடுத்துரைத்து புரியவைத்து அதிலும் கூடுதலாக பேரின்பம் அனுபவிப்பதற்காவும்,   

                9.4. ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் இடையில் வேறு ஏதேனும் துணைப்பிரிவை ஏற்படுத்திக்கொண்டு சிந்திக்க  அவசியம் உள்ளதா?

        10.    அவசியமிருப்பின்  அது என்ன பிரிவு ?  சிந்தித்து  பேரின்பம் அனுபவிக்கலாமே!   

          வாழ்க திருவேதாத்திரியம்!!   வளர்க வளர்கவே திருவேதாத்திரியம்!!

     

     

    *  ஞானக் களஞ்சியம் – கவி எண். 297  –  முழுமனிதன்  –  03-01-1959 


     அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    https://www.prosperspiritually.com/contact-us/

          வாழ்க அறிவுச் செல்வம்!              வளர்க அறிவுச் செல்வம்!!


    Loading