admin

Author Archives

  • உங்கள் கருத்துக்கள்

    வி.பெ.இராஜமோகன்

    23 Apr, 2020 at 11:49 am

    ஆசையின்மையே பேரானந்தம் என நிசர்கதத்தா மகாராஜ் கூறுவது சரியே. துறவு என மகரிசி கூறுவதும் சரியே. ஆசைகளையெல்லாம் கடந்து எளிய வாழ்க்கையில் மனம் திளைக்கும்போது பரவசநிலை உண்டாகும். பேரின்பம் கிட்டும். வாழ்க வளமுடன்.  

    Feed back to the category:

    “Desirelessness is the Highest Bliss”

    … நிகர்கதத்தா மகராஜ்சிந்திக்க அமுத மொழிகள்- C-286


    Other comments will appear shortly please


     

    Loading

  • சிந்திக்க வினா-336

    வாழ்க திருவேதாத்திரியம் !             வளர்க திருவேதாத்திரியம்!!

    சிந்திக்க வினாக்கள் – 336

    (இணையதளத்தில் 1006  வது பதிவு)

                                                                                                               நாள்- 14-06-2024

                                                                                               உ.ச.ஆ.-14-06-39

    பிரதான வினா(Main Question)

     ‘நான் யார்?’ எனும் வினாவிற்கு  ‘உடல்’ விடை என்பது எவ்வாறு தவறானது?

     துணை வினாக்கள் (Sub questions):

    1. வினா என்பது பிறரிடம் கேட்பது. ஆனால் ’நான் யார்?’ என்பது தன்னிடமே வினவுவது; விசித்திரமானதாக இல்லையா?
    2. மனிதனை புனிதனாக்கும் இவ்வினா ஆறாம் அறிவிற்கு வாழ்க்கையில் எப்போது எழும்? எல்லோருக்கும் இவ்வினா எழவில்லையே! ஏன்?  எண்ணங்கள் செயல்படும் ஐந்துகோசங்களின் தலையீடு ஏதேனும் உள்ளதா?
    3. இவ்வினா எழவில்லையானால் மனிதனின் நிலை என்ன?  மனிதன் புனிதனாக முடியாதா?
    4. இவ்வினா எழும் வரை மனிதன் புனிதனில்லையா? பின்னர் என்ன அவன்? எப்படி இவ்வினா மனிதனைபுனிதனாக்குகின்றது?
    5. தேர்வில் வினாவிற்கு தவறான விடை அளித்தால் அதற்கு பூச்சியம் மதிப்பெண் வழங்கப்படுகின்றது. இந்த சுயதேர்வில் இவ்வினாவிற்கு தவறான பதிலை சரி என நினைத்துக்கொண்டிருந்தால் நாம் பெறும் மதிப்பெண் என்ன? விளைவு என்ன?
    1. திருவள்ளுவருக்கு முன்னர் தோன்றிய கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ் கி.மு. 500 நூற்றாண்டிலேயே இளைஞர்களிடம் என்ன கூறினார்?
    2. ஸ்ரீ ரமணரிடம் பக்தர்கள் தங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் என்று வேண்டியதற்கு எப்படி ஆசிர்வாதம் அளித்தார்?
    3. ஸ்ரீ ரமணரின் ஆசிர்வாதம் எப்போது பலன் அளிக்க ஆரம்பித்தது?
    4. நான் யாா் என்கின்ற கேள்விக்கு சரியான விடையை அனுபவ பூர்வமாகப் பெறுதலின் பலன்கள் என்ன?(Click here)
    5. மனநிறைவிற்கும்(satisfaction in life), அறிவின் முழுமைப்பேற்றிற்கும் ’நான் யார்?’ என்கின்ற வினாவிற்கு கருத்தியலாக பெற்ற  விடையை(theoretical answer) செயல்முறையில்(practical) உறுதிபடுத்துவதற்கும் என்ன தொடர்பு? என்ன உறவு?

    வாழ்க அறிவுச் செல்வம்!                                      வளர்க அறிவுச் செல்வம்!!

                                      வாழ்க வையகம்!  வாழ்க வளமுடன்!!


     

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள் – 335

    வாழ்க திருவேதாத்திரியம் !             வளர்க திருவேதாத்திரியம்!!

    சிந்திக்க வினாக்கள்335

    (1005  வது பதிவு)

                                                                                                                         நாள்12-06-2024

                                                                                                                         ...-12-06-39

     குறிப்பு: நேற்றைய(11-06-2024) சிந்திக்க வினாவுடன் தொடர்புடையது.

    பிரதான வினா(Main Question)

    தொன்று தொட்டு  இன்று வரை அருளாளர்கள்  “மனிதப்பிறவியின் நோக்கம் இறையுணர்வு பெறுவது” என்று கூறி வருவதை மானுடம் ஏற்றுக்கொண்டுள்ளதா?

    துணை வினாக்கள் (Sub questions):

    1. ஏற்றுக் கொண்டது என்றால் அதற்கான அடையாளம் என்ன?
    2. ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை? அக்கூற்று விஞ்ஞானப்பூர்வமாக(as per Science) இல்லையா?
    3. இக்கூற்றினை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் எவ்வாறு அதனை விஞ்ஞானப்பூர்வமாக (as per Science)உறுதிப்படுத்துவது?
    4. மனவளக்கலை அக்கூற்றினை எவ்வாறு உறுதிப்படுத்துகின்றது? ஆன்மீக ரீதியாகவா அல்லது விஞ்ஞானப்பூர்வமாகவா?
    5. திருவேதாத்திரிய மந்திரம் எந்த கவியின் மூலமாக  பிறவியின் நோக்கம் பற்றி எளிமையாகக் கூறுகின்றது?Click here

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                      வளர்க அறிவுச் செல்வம்!!

    வாழ்க வையகம்!  வாழ்க வளமுடன்!!


    Loading