admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்-288

    வாழ்க மனித அறிவு!                                                                             வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்-288

                                                                                                                           25-04-2020 — சனி

    தேவைகள் குறையும் அளவுக்கே தெய்வத்தன்மை அடைவோம்.”
                                                                                                                              – சாக்ரடீஸ்

    பயிற்சி:

    • தேவைகள் குறைவதற்கும் தெய்வத்தன்மைக்கும் என்ன தொடர்பு?
    • அந்த தொடர்பு அறிவியல் அடிப்படையிலானதா?
    • முதல் தத்துவஞானியான சாக்ரடீஸ் அவதரித்த  பின்னர் முன்னூறு ஆண்டுகள் கடந்து  அவதரித்த  திருவள்ளுவப் பெருந்தகை இந்த உண்மையினை  எவ்வாறு இயம்புகிறார்?
    • இருபது நூற்றாண்டுகள் கழித்து, வள்ளுவப் பெருந்தகையை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்ட வேதாத்திரி மகரிஷி அவர்கள் இந்த உண்மையை எவ்வாறு கூறுகிறார்?
    • பொதுவாக ஆன்மிக உலகில் இவ்வுண்மையை குருமார்கள் தனது சீடர்களுக்கு எவ்வாறு உணர்த்துகின்றனர்?

    சிந்திப்போம்! 

     வாழ்க வளமுடன்!


    அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    https://www.prosperspiritually.com/contact-us/

     வாழ்க அறிவுச் செல்வம்!                                                வளர்க அறிவுச் செல்வம்!!

     குறிப்பு:  நாளைய (26-04-2020) சத்சங்க நிகழ்ச்சியில் அறிவிற்கு விருந்து பகுதி 288 ல் பாரதியார் கூறிய “இனியெரு விதி செய்வோம்” பற்றி ஆராய இருக்கிறோம்.

         


     

       

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள் – 291

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    lotus


    சிந்திக்க வினாக்கள் – 291


    24-04-2020 — வெள்ளி

    திருத்திடுவோம்! அஞ்சவேண்டாம்!!  

    பயிற்சி—

    வள்ளலாரின் கடைசிச் செய்தியில் “திருத்தி விடுவோம்.  அஞ்சவேண்டா” எனக் கூறியுள்ளாரே!  அதன் பொருள் என்ன?

     திருத்தி விடுவோம் என்கிறார்.  யாரை சேர்த்துக் கொண்டு பன்மையில் திருத்திவிடுவோம் எனக் கூறுகிறார்?

     அஞ்ச வேண்டாம் என்கிறார்.  பயப்படவேண்டாம் என யாரிடம்  கூறுகிறார்?  இதனால் நாம் அறிந்துகொள்ள  வேண்டியது என்ன?

     சிந்திக்கலாமே!

    வாழ்க திருவேதாத்திரியம் !                                           வளர்க திருவேதாத்திரியம்!!

                     வாழ்க அறிவுச் செல்வம்!                      வளா்க அறிவுச் செல்வம்!!


     அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    https://www.prosperspiritually.com/contact-us/

     

    குறிப்பு: 

    நாளைய (25-04-2020) சத்சங்க நிகழ்ச்சியில் சிந்திக்க  அமுதமொழி (291) பகுதியில் சாக்ரடீஸ்

                          தெய்வத்தன்மை அடைவது பற்றி கூறுவதனை       

    அறிந்துகொள்வோம்.

     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 287

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    lotus


    சிந்திக்க அமுத மொழிகள்- 287


    23-04-2020 — வியாழன்

    சாகா வரமும்  பரிபாக நிலையும்!

    பயிற்சி—

    1. இந்த செய்தியிலிருந்து ஆன்மீக சாதகர்களுக்கு என்ன அறிவுறுத்தப்படுகின்றது?
    2. வள்ளலாரின் விருப்பம் என்ன?
    3. வள்ளலாரின் பூதவுடல் இல்லாதபோதும் அவருடைய இலக்கு என்ன?
    4. மக்களை எத்தனை வகையாக பிரித்துப் பார்க்கிறார் வள்ளலார்?
    5. சாகா வரம் என்பது என்ன? அதனை இதுவரை நாம் அறிந்தமட்டில் யாருக்கேனும் அளித்துள்ளாரா?
    6. பரிபாக நிலை என்பது என்ன?
    7. இச்செய்தியில் நம்பிக்கையூட்டும் அம்சம் என்ன?
    8. இதேபோன்று நம்பிக்கையூட்டிய பெருமகனார்கள் யார் யார்?
    9. அந்த அருட்ச்செய்திகளை நினைவுபடுத்தி மகிழ்வோம். மகிழ்ந்து அப்பெருமகனார்களின் புனித எண்ணத்திற்கு மேலும் வலுவூட்டுவோமாக!
    10. வள்ளலாரின் அழுத்தமான எண்ணமே மனவளக்கலை மூலம் நம் அனைவரையும் வேதாத்திரி மகரிஷி அவர்களின் சீடர்களாக்கியுள்ளதல்லவா?
    11. அப்பயனை இப்பிறவியிலேயே நாம் அனைவரும் பெறுவோமாக!
    12. யார் யாருக்கு என்ன வரம் அளிக்கவிருக்கிறார் என்பது அவரவர்கள் நிலையைப் பொருத்தது என்பதனை நினைவில் கொண்டு பயிற்சிகளை செய்வோம். இப்பிறவியை கடைசியாக்கிக் கொள்வோம். 

    வாழ்க திருவேதாத்திரியம்                                             வளர்க திருவேதாத்திரியம்!!

                     வாழ்க அறிவுச் செல்வம்                      வளா்க அறிவுச் செல்வம்


     அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    https://www.prosperspiritually.com/contact-us/

     

     

    Loading