admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 80  

    வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

        06-06-2015—சனி

     

    “ அற்பருக்கு ஆண்டவன் அளித்த வரமே அகம்பாவம்” 

    ……. அறிஞர். பர்ட்டன் புரூஸ்.

         

    பயிற்சி— 1) அகம்பாவம் உடையவரை அற்பருடன் ஒப்பிடுகிறாரே அறிஞா் பர்ட்டன் புரூஸ்.  இது எவ்வாறு சரி?

      2) மேலும் சிந்திக்கவும்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 79

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

     

    05-06-2015—வெள்ளி

                                        மூதூரை
    ”நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க
    நல்லார் சொல் கேட்பதும் நன்றே – நல்லார்
    குணங்கள் உரைப்பதும் நன்றே; அவரோடு
    இணங்கி இருப்பதும் நன்று.”                                   …… அவ்வையார்.

     

    பயிற்சி— 1) இக்கவியில் கூறப்படும் நான்கும் எந்த நியதியின் கீழ் நன்மையைத் தருகின்றன?
    2) அவ்வையாரின் இக்கவியின் பொருளுடன், மகரிஷி அவர்களின் கவியினை ஒப்பிட்டுப்பார்க்கவும்.
    3) நல்லாரின் குணங்களை(சிறப்புக்களை) எடுத்துக் கூறுவது சிறந்த நன்மையைத் தரும். இதில் உள்ள விஞ்ஞானம் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                           வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-78

    வாழ்க மனித அறிவு                                   வளர்க மனித அறிவு

    04-06-2015 – வியாழன்

    வெட்ட வெளியே தெய்வம் என்பதனை எவ்வாறு உறுதிபடுத்துவது?

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்

    விடை
    சிந்திக்க வினாக்கள்-77

    01-06-2015— திங்கள்

    1) பாசம், அன்பு ஆகிய இரண்டையும் வரையறுக்கவும், எது சரி?

    2) இவ்விரண்டையும் வித்தியாசப்படுத்திக் கூறும் மகரிஷி அவர்கள் அருளியுள்ள கவியினை

    நினைவு கூறவும்.
    விடை —

    ஞானக்களஞ்சியம் பாகம் – 1 – பாசமும் அன்பும் என்கின்ற தலைப்பில் கவி எண் 589.
     “அறிவு கட்டுண்டு செயல் விளைவிக்கும்;
    விளைவறியாதது பாசம்;
    அறிவின் அசையா உறுதியில் சுரக்கும்
    விளைவையும் அறியும் அன்பு.” … வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளர்க அறிவுச் செல்வம்

    Loading